தேசிய ரீதியில் இரட்டைப் பதக்கங்களை பெற்ற மொஹமட் முனீருக்கு காத்தான்குடி அறிவிப்பாளர்கள் போரத்தினால் கெளரவிப்பு

(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி அறிவிப்பாளர்கள் போரத்தின் "வாழும் போதே வாழ்த்துவோம்" திட்டத்தின் கீழ் இலங்கை புத்தாக்குனர் ஆணைக் குழுவினால் வருடாந்தம் தேசிய ரீதியில் நடாத்தும் (“Sahasak Nimavum” National Invention and Innovation competition is an annual event organized by the Sri Lanka Inventors Commission) போட்டியில் கடந்த வருடம் “Sahasak Nimavum 2020” கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பங்குபற்றி தேசியரீதியில் தங்கம் மற்றும் வெள்ளி என இரட்டைப் பதக்கங்களைப் வெற்றி பெற்று முழு கிழக்கு மாகாணத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ள காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த பாறுக் மொஹமட் முனீர் அவர்களை வாழ்த்தி கெளரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (27) காத்தான்குடியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி) அவர்கள் அதிதியாக கலந்துகொண்டதுடன்  போரத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கி வைத்தனர்.





தேசிய ரீதியில் இரட்டைப் பதக்கங்களை பெற்ற மொஹமட் முனீருக்கு காத்தான்குடி அறிவிப்பாளர்கள் போரத்தினால் கெளரவிப்பு தேசிய ரீதியில் இரட்டைப் பதக்கங்களை பெற்ற மொஹமட் முனீருக்கு  காத்தான்குடி அறிவிப்பாளர்கள் போரத்தினால் கெளரவிப்பு Reviewed by Editor on December 29, 2021 Rating: 5