ஆடைத் தொழிற்சாலை பஸ் விபத்து,38 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை - கண்டி பிரதான வீதி மங்குபிரிச் பகுதியில் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 38 பேர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்விபத்து இன்று (07) செவ்வாய்க்கிழமை காலை வேளையில் கப்பல் துறை சுதந்திர வர்த்தக வலயத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கோமரங்கடவல, மொரவெவ, கன்னியா பகுதியைச் சேர்ந்த 20 இற்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கப்பல் துறை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் இளைஞர் யுவதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஒன்று, இரண்டு பஸ்களை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். இதன்போது குறித்த பஸ் வீதியோரத்தில் இருந்த மைல்கல் மற்றும் மின்கம்பம் ஆகியவற்றை மோதி வீழ்த்திச் சென்றுள்ளதோடு, அன்ரிஜன் சோதனையில் சாரதிக்கு கொவிட் தொற்று உறுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆடைத் தொழிற்சாலை பஸ் விபத்து,38 பேர் வைத்தியசாலையில் ஆடைத் தொழிற்சாலை பஸ் விபத்து,38 பேர் வைத்தியசாலையில் Reviewed by Editor on December 07, 2021 Rating: 5