ஜப்பானியத் தூதுவர் சபாநாயகர் அபேவர்த்தனை சந்தித்தார்

இலங்கைக்கான புதிய ஜப்பானியத் தூதுவர் திரு.மிசுகோஷி ஹிட்டயாகே மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை இன்று (01) புதன்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் ஜப்பானியத் தூதரகத்தின் பிரதித் தலைவர் திரு.கட்சுகி கோட்டரோ, பொருளாதாரப் பிரிவின் தலைவரும், இரண்டாவது செயலாளர் இமாயி கயோரி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.





ஜப்பானியத் தூதுவர் சபாநாயகர் அபேவர்த்தனை சந்தித்தார் ஜப்பானியத் தூதுவர் சபாநாயகர்  அபேவர்த்தனை சந்தித்தார் Reviewed by Editor on December 01, 2021 Rating: 5