நீர் வழங்கல் சபையின் பராமரிப்பு மற்றும் சேவை நடவடிக்கைகளுக்காக கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு

கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு  சபையின் மாவட்ட மற்றும் பிரதேச காரியாலயங்கள் ஊடாக நீர் விநியோக சேவை மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு அவசியமான முப்பது கெப்ரக வாகனங்கள் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்களால் இன்று (30) செவ்வாய்க்கிழமை மாவட்ட காரியாலயங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் சுமார் 325 மில்லியன் ரூபா செலவில் இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள்,

இந்த கெப்ரக வாகனங்கள் நீர் தாங்கி மோட்டார் மற்றும் நீர் வினியோக குழாய் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது.இதன் காரணமாக  மாவட்டத்தில் எச்சந்தர்ப்பத்திலும் மிக விரைவாக பராமரிப்பு மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்த வாகனங்களை பல சிரமங்களுக்கு மத்தியில் எமக்கு பெற்றுக் கொடுத்தமைக்காக வேண்டி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அதன் நிர்வாகிகளுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியினை தெரிவிப்பதாக அமைச்சர் தனதுரையில் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் நீர் வழங்கல் அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் தேசிய நீர் வழங்கல் சபையின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



நீர் வழங்கல் சபையின் பராமரிப்பு மற்றும் சேவை நடவடிக்கைகளுக்காக கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு நீர் வழங்கல் சபையின் பராமரிப்பு மற்றும் சேவை நடவடிக்கைகளுக்காக  கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு Reviewed by Editor on November 30, 2021 Rating: 5