தொழில் நுட்பக்கல்லூரி பதிவாளர் பியாஸின் முயற்சியால் உள்ளக வீதி நிர்மானம் - சம்மாந்துறை கல்லூரி நிர்வாகம் பாராட்டு

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரிகளின்  பதிவாளர் ஐ.பியாஸ் அவர்களின் முயற்சியினால், சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரி அதிபர் ஜனாப். ஹசன் அவர்களுடன் இணைந்து பல புதிய உள்ளக அபிவிருத்தி திட்டங்களை சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் நடைமுறைப்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளார்.

பதிவாளர் பியாஸ் அவர்களின் அயராத முயற்சியால் புதிதாக இரண்டு கிலோமீற்றர் உள்ளக வீதி அமைப்பதற்கான அனுமதியை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண மேலதிக மாகாண பணிப்பாளர் வழங்கியமையையிட்டு கல்லூரி நிர்வாகம் பதிவாளருக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






தொழில் நுட்பக்கல்லூரி பதிவாளர் பியாஸின் முயற்சியால் உள்ளக வீதி நிர்மானம் - சம்மாந்துறை கல்லூரி நிர்வாகம் பாராட்டு தொழில் நுட்பக்கல்லூரி பதிவாளர் பியாஸின் முயற்சியால் உள்ளக வீதி நிர்மானம் - சம்மாந்துறை கல்லூரி நிர்வாகம் பாராட்டு Reviewed by Editor on December 01, 2021 Rating: 5