மருத்துவ மேற்படிப்புக்காக செல்லும் டாக்டர் அகீலாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா

(சியாத்.எம்.இஸ்மாயில்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கதிரியக்கவியல்  பிரிவில் பணியாற்றிய,  வைத்தியர் எஸ்.கன்சுல் அகீலா  (MD- Radiology) மேற்படிப்புக்கான நுழைவுப்பரீட்சையில் அண்மையில் சித்தியடைந்து மேற்படிப்புக்காகத் தெரிவு செய்யப்பட்டார். 

மருத்துவ மேற்படிப்புக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு செல்லும் இவரது சேவையினைப் பாராட்டிக் கௌரவப்படுத்தும் நிகழ்வு அக்கரைப்பற்று ஆதார  வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வைத்தியர் ஏ.சீ.அப்துல் ரஷாக் தலைமையில் வைத்தியசாலையில் (03) வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

இதன்போது நலன்புரிச் சங்கத்தின் தலைவர்   வைத்தியர். ஏ.சீ.அப்துல் ரஷாக் வைத்தியர் எஸ்.கன்சுல் அகீலாவுக்கு ஞாபகச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அசாத் எம் ஹனீபா, திட்டமிடல் அபிவிருத்தி பொறுப்பு  வைத்திய அதிகாரியான டாக்டர் ஆகில் ஷரிபுத்தீன், டாக்டர். எம்.எம். தாஸிம், தாதிய பரிபாலகர் பி.ரீ.நௌபர், நிருவாக உத்தியோகத்தர் ஏ.எம்.றிபாய், நலன்புரிச்சங்கத்தின்  செயலாளர் ஏ.பி. நூறுல்லாஹ், அபிவிருத்தி உத்தியோகத்தர் என். சந்திரலேகா மற்றும் நலன்புரிசங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட  பலர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இவர், ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களான ஐ. சாகிது மற்றும் ஏ. சாபிறா உம்மா ஆகியோரின் புதல்வியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


மருத்துவ மேற்படிப்புக்காக செல்லும் டாக்டர் அகீலாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா மருத்துவ மேற்படிப்புக்காக செல்லும் டாக்டர் அகீலாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா Reviewed by Editor on December 05, 2021 Rating: 5