இரண்டாவது திருமண பந்தத்தில் இணைந்த மஹேல ஜயவர்தன

(முஹம்மட் றியாத்)

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பு ஆலோசகரும், முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன முன்னாள் மனைவியை பிரிந்திருந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மஹேல ஜயவர்தன , சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் ஊழியரான நடாஷா மகலந்தவை அண்மையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இதேவேளை மஹேல- முன்னாள் மனைவி கிறிஸ்டினா கருத்து வேறுபாடு காரணமாக 2018 இல் விவாகரத்து செய்து கொண்டனர். மஹேல- கிறிஸ்டினா தம்பதிகளிற்கு 8 வயதான மகள் உள்ள நிலையில், அவர் தாயின் பராமரிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



இரண்டாவது திருமண பந்தத்தில் இணைந்த மஹேல ஜயவர்தன இரண்டாவது திருமண பந்தத்தில் இணைந்த மஹேல ஜயவர்தன Reviewed by Editor on December 31, 2021 Rating: 5