வலி இல்லாமல் தற்கொலை செய்ய புதிய இயந்திரம் - அனுமதியும் இயந்திரத்திற்கு

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன இயந்திர பயன்பாட்டிற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

“வைத்தியர் டெத்” என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் வைத்தியருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

“சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று, அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் “சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் இந்த இயந்திரம் செயற்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




வலி இல்லாமல் தற்கொலை செய்ய புதிய இயந்திரம் - அனுமதியும் இயந்திரத்திற்கு வலி இல்லாமல் தற்கொலை செய்ய புதிய இயந்திரம் - அனுமதியும் இயந்திரத்திற்கு Reviewed by Editor on December 08, 2021 Rating: 5