(றிஸ்வான் சாலிஹு)
இஸ்லாமிய கற்கைநெறியில் வெவ்வேறு துறைகளில் கலாநிதி (Ph.D) பட்டம் பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த 05 கண்ணியத்திற்குரிய உலமாக்களை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு அக்கரைப்பற்று பட்டன ஜூம்ஆ பள்ளிவாயில் அதன் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றுள்ளது என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று பட்டன ஜூம்ஆ பள்ளிவாயல் பொருளாளருமான ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில்,
1.கலாநிதி அஷ்ஷெய்க் PM. ஹம்தூன் (ஷர்க்கி)
Ph.D. in Arabic Literature
2.கலாநிதி அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் MIM. சித்தீக் (அல்-அஸ்ஹரி)
Ph.D. in Sunnah Studies
3.கலாநிதி அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் MA. அஸ்ஹர் (பலாஹி)
Ph.D. in Islamic Law
4.கலாநிதி அஷ்ஷெய்க் UL. முஹம்மட் அஸ்லம் (ஷர்க்கி)
Ph.D. in Islamic Law
5.கலாநிதி அஷ்ஷெய்க் AM. றாசிக் (மன்பஈ)
Ph.D. in Linguistic
ஆகிய ஐந்து கலாநிதிகளையும் கெளரவிக்கும் இந்நிகழ்வில், அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் பொருளாளர் மேலும் தெரிவித்துள்ளார்.