ஜனாதிபதி விருதுக்காக நகீப் முகம்மது பாஹிரின் தலைமையில் 'மரம் நடுவோம் சூழலைப் பாதுகாப்போம்''

(சியாத் எம். இஸ்மாயில்)

அட்டாளைச்சேனை சுவடுகள் அமைப்பினால் 'மரம் நடுவோம் சூழலைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் மர நடுகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு  அட்டாளைச்சேனை கடற்கரை பூங்காவில்புதன் கிழமை (22) நடைபெற்றது.

சுற்றாடலின் முன்னோடி ஜனாதிபதி விருதுக்காக, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் நகீப் முகம்மது பாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னிட்டு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கரையோர பிரதேசங்களின் பசுமையாக்கல் நோக்கில் மரக்கன்றுகள் நட்டுவித்தல் மற்றும்  விழிப்புணர்வு நிகழ்வுகளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக  உதவி பிரதேச செயலாளரும் சட்டத்தரணியுமான நஹீஜா முஸாபிர் கலந்து கொண்டு மரக்கன்றினையும் நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எஸ். நபார் மற்றும் அக்கரைப்பற்று பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். சதாத், சுற்றாடல்  உத்தியோகத்தர் எஸ்.எம். றியாத், அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமுகத்தின் செயலாளர் சாலிஹ் ஹாசிம், சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் ஏ. சீ. நகீப், பிரதம முகாமைத்து சேவை உத்தியோகத்தர் எம்.ஏ.சி.எம். றகீப், பிரதேச சபை நிதி உதவியாளர் எச்.ஹூஸ்ரி, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













ஜனாதிபதி விருதுக்காக நகீப் முகம்மது பாஹிரின் தலைமையில் 'மரம் நடுவோம் சூழலைப் பாதுகாப்போம்'' ஜனாதிபதி விருதுக்காக நகீப் முகம்மது பாஹிரின் தலைமையில் 'மரம் நடுவோம் சூழலைப் பாதுகாப்போம்'' Reviewed by Editor on December 23, 2021 Rating: 5