முஷாரப் எம்.பிக்கு கட்டாரில் வழங்கப்பட்ட வரவேற்பு

கட்டார் நாட்டிற்கு பிரேத்தியேக விஜயம் செய்துள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்பிற்கு கட்டார் வாழ் ஆதரவாளர்களால் நேற்று (17) வெள்ளிக்கிழமை கட்டார் வாழ் இலங்கையர்களால் வரவேற்பளிக்கப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து சிறப்பிக்கும் ஒன்று கூடல் நிகழ்வொன்றும் கட்டார் New Salata Skills Development Center மண்டபத்தில் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவிலான அம்பாறை மாவட்ட ஆதரவாளர்கள், கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததோடு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.






முஷாரப் எம்.பிக்கு கட்டாரில் வழங்கப்பட்ட வரவேற்பு முஷாரப் எம்.பிக்கு கட்டாரில் வழங்கப்பட்ட வரவேற்பு Reviewed by Editor on December 18, 2021 Rating: 5