சுகாதார ஊழியர்களுக்கு எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு

(றிஸ்வான் சாலிஹு)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின், தெரிவு செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு, எச்.ஐ.வி/எயிட்ஸ் மற்றும் அது சார்ந்த களங்கம்/பாகுபாடு என்பன தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை (07) நடாத்தப்பட்டது.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் மேகநோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் கே.ஏ.சீ.ஆர்.விஜேசேகர அவர்கள் பிரதான விளக்கவுரையை நிகழ்த்தினார்.

வைத்திய நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதுக்கள், ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





சுகாதார ஊழியர்களுக்கு எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு சுகாதார ஊழியர்களுக்கு எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு Reviewed by Editor on December 07, 2021 Rating: 5