இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன நிகழ்வு இன்று (07) செவ்வாய்க்கிழமை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிக துணைத் தூதுவர், தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் பேராசிரியர் காதர் மொகிதீன் குழுவினர் கெளரவிப்பு
Reviewed by Editor
on
December 07, 2021
Rating: