சற்று முன் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பால்மா இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 150 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், இரண்டாம் கட்டமாக தற்போது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



சற்று முன் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு சற்று முன் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு Reviewed by Editor on December 30, 2021 Rating: 5