அரச வைத்திய அதிகாரிகளுக்கு எந்தவொரு அநீதியும் இழைக்கப்படவில்லை - சுகாதார அமைச்சர்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்திருக்கும் பணிப்பகிஷ்கரிப்பு நான்காவது நாளாக இன்றும் (23) இடம்பெறுகின்றது. 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகிறது என்று சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களின் கோரிக்கைகளை அவதானிக்கும் போது, அவர்களுக்கு எந்தவொரு அநீதியும் இடம்பெறவில்லை என்று சுகாதார அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அநீதி இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்ட முடியுமாயின் அதை சரி செய்வதற்குப் பின்னிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த எந்தச் சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக வருகை தந்த நோயாளர்கள் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டனர். இதேவேளை தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)



அரச வைத்திய அதிகாரிகளுக்கு எந்தவொரு அநீதியும் இழைக்கப்படவில்லை - சுகாதார அமைச்சர் அரச வைத்திய அதிகாரிகளுக்கு எந்தவொரு அநீதியும் இழைக்கப்படவில்லை - சுகாதார அமைச்சர் Reviewed by Editor on December 23, 2021 Rating: 5