பொல்லடி குழு அமைப்பது தொடர்பான வேலைத் திட்டம்- 2021

(றிஸ்வான் சாலிஹு)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த பொல்லடி குழு அமைப்பது தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு நேற்று புதன்கிழமை (22) அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரி.எம். முஹம்மட் அன்சார் அவர்களின் தலைமையில்,அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தெளபீக் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் மிக சிறப்பாக நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற பொல்லடி பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட 50 மாணவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு பிரபல ஆய்வாளரும் பொல்லடி கலை தொடர்பான நூலசிரியருமான சிறாஜ் மஸ்ஹுர் அவர்கள் இக்கலையின் ஆரம்பம் , நுனுக்கங்கள் தொடர்பாக  விளக்கமளித்ததுடன், ஆசிரியர் பி.ரி. சமீர் அவர்கள் மாணவர்களை பயிற்றுவித்தார்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.  முக்தார் ஹுஸையின் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







பொல்லடி குழு அமைப்பது தொடர்பான வேலைத் திட்டம்- 2021 பொல்லடி குழு அமைப்பது தொடர்பான வேலைத் திட்டம்- 2021 Reviewed by Editor on December 23, 2021 Rating: 5