அக்கரைப்பற்றில் கெளரவிக்கப்பட்ட ஐந்து கலாநிதிகள்

 (றிஸ்வான் சாலிஹு)

இஸ்லாமிய கற்கைநெறியில் வெவ்வேறு துறைகளில் கலாநிதி (Ph.D) பட்டம் பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த ஐந்து உலமாக்களை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு  அக்கரைப்பற்று பட்டின ஜூம்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இன்று (10) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து, பட்டின ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவரும், ஓய்வு நிலை அதிபருமான அல்-ஹாஜ் எம்.ஏ.உதுமாலெப்பை தலைமையில் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

கலாநிதி அஷ்ஷேக் பீ.எம்.ஹம்தூன் (ஷர்க்கி) -Ph.D. in Arabic Literature), கலாநிதி அஷ்ஷேக் அல்ஹாபிழ் எம்.ஐ.எம்.சித்தீக் (அல்-அஸ்ஹரி) - Ph.D. in Sunnah Studies), கலாநிதி அஷ்ஷேக் அல்ஹாபிழ் எம்.ஏ. அஸ்ஹர் (பலாஹி) - Ph.D. in Islamic Law), கலாநிதி அஷ்ஷேக் யூ.எல். முஹம்மட் அஸ்லம் (ஷர்க்கி) - Ph.D. in Islamic Law), கலாநிதி அஷ்ஷேக் ஏ.எம்.றாசிக் (மன்பஈ)- Ph.D. in Linguistic) ஆகிய ஐந்து உலமாக்களுமே பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்தி, ஞாபக சின்னம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்கள்.

கெளரவிக்கப்பட்ட கலாநிதிகளின் வாழ்க்கை தொகுப்பை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் அவர்கள் விளக்கி உரையாற்றினார்.

அக்கரைப்பற்று உலமா சபைத் தலைவரும், மூத்த உலமாக்களின் ஒருவருமான மெளலவி எம்.ஏ.அப்துல் லத்தீப் (பஹ்ஜி) அவர்கள் கெளரவிக்கப்பட்ட கலாநிதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.

ஏற்புரை மற்றும் தாங்கள் பெற்ற பெறுமதிமிக்க பட்டத்தை பெறுவதற்கு சந்தித்த சவால்கள், கஸ்டங்கள் அத்தோடு எங்களை இன்று கெளரவித்தமைக்கு நன்றியும் தெரிவித்தார் கெளரவிக்கப்பட்ட கலாநிதிகள் சார்பாக கலாநிதி அல்-ஹாபிழ் எம்.ஐ.சித்தீக் அவர்கள்.

இந்நிகழ்வில் பட்டின ஜும்ஆ பள்ளிவாசல் பொருளாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.தவம், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள், நிர்வாகிகள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

























அக்கரைப்பற்றில் கெளரவிக்கப்பட்ட ஐந்து கலாநிதிகள் அக்கரைப்பற்றில் கெளரவிக்கப்பட்ட ஐந்து கலாநிதிகள் Reviewed by Editor on December 10, 2021 Rating: 5