பெண் ஆளுமைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர்

(றிஸ்வான் சாலிஹு)

கொரோனா காலப்பகுதியில் சிறந்த முறையில் சேவையாற்றிய அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு RKS Media Network இன் ஏற்பாட்டில் இன்று (04) சனிக்கிழமை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் கொரோனா பரவலின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை சிறந்த முறையில் சேவையாற்றி வரும் அரச மற்றும் தனியார் அதிகாரிகளின் சேவைகளை பாராட்டி கௌரவமளிக்கும் நோக்குடனே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், இறக்காமம் பிரதேச  உதவி செயலாளராக  இருந்த சட்டத்தரணி எப். நஹீஜா முஸப்பிர் அவர்கள்  கொரோனா  பாதுகாப்பு செயலணி ஊடாக இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் கொரோனா பரவலை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு இடர் காலப் பகுதியில் மக்களின் நாளாந்த செயற்பாட்டை அசௌகரியம் இன்றி சிறந்த முறையில் ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தி  அரப்பணிப்போடு செற்பட்டமமைக்காக சிறந்த இளம் பெண் ஆளுமைக்கான விருது வழங்கி இவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி கெளரவ எச்.எம்.எம்.ஹரீஸ், கெளரவ பைசால் ஹாசீம் அவர்களும், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் அரச உயரதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இவர் தற்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




பெண் ஆளுமைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் பெண் ஆளுமைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் Reviewed by Editor on December 04, 2021 Rating: 5