தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையமானது நாட்டின் மரக்கறி மற்றும் தானிய தேவையில் 70% இற்கும் அதிகமானவற்றை வழங்குகிறது.

கடந்த வாரம் ரூ.140க்கு விற்பனையான ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை இன்று ரூ.250-260 ஆக அதிகரித்துள்ளது.

ரூ.450க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ செத்தல் மிளகாயின் மொத்த விற்பனை விலை ரூ.800 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ரூ.130-135க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பருப்பின் விலை இன்று ரூ.170 ஆக அதிகரித் ள்ளது.

கடந்த வாரம் ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை இன்று ரூ.160 ஆக அதிகரித்துள்ளது.

அதிக விலைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்ய கேள்வி இல்லாததால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்வதில் சிரமத்தை எதிர்கொள்வதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

(தினக்குரல்)



தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு Reviewed by Editor on December 17, 2021 Rating: 5