பொலிஸ் தலைமையகம் வழங்கியுள்ள ஆறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம்

மூன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மூன்று பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜி.டி. கருணாரத்ன குற்றப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரதி பொலிஸ் மா அதிபர் இ. எம். வி. குணரத்ன  சுற்றுலாப் பிரிவுக்குப் பொறுப்பான பதவிக்கு மேலதிகமாக சமூக பொலிஸ் மற்றும் கடற்படைக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பொறுப்பான பதில் பிரதி பொலிஸ் மா அதிபர் தி. வீரசேகர இரத்தினபுரி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையக பதில் பிரதி பொலிஸ் மா அதிபரான எஸ்.ஜீ.ரணசிங்க நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

குற்றப் பிரிவின் பதில் பொலிஸ் மா அதிபரான எச்.சமுத்திரஜீவ கிளிநொச்சி மாவட்ட பிரதி  பொலிஸ் மா அதிபராக நியமிக்கப் பட்டுள்ளார்.

(நன்றி -  தினக்குரல்)



பொலிஸ் தலைமையகம் வழங்கியுள்ள ஆறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம் பொலிஸ் தலைமையகம் வழங்கியுள்ள ஆறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம் Reviewed by Editor on December 11, 2021 Rating: 5