நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் திடீர் இராஜினாமா

(றிஸ்வான் சாலிஹூ)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் சிறாஜ் மஷ்ஹுர் மற்றும் தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மட் ஆகியோர் தங்களது பதவிகளிருந்தும், உறுப்புரிமையிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக கட்சியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளராக பணியாற்றிய சகோதரர்.சிராஜ் மஷ்ஹுர் மற்றும் தேசிய அமைப்பாளராக   பணியாற்றிய சகோதரர். நஜா முஹமட் ஆகியோர் தமது பதவிகளிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் இராஜினாமா செய்திருந்தனர். 

தமது இராஜினாமா கடிதங்களை சில  தினங்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக தலைமைத்துவ சபைக்கு அவர்கள் அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமைத்துவ சபை கூட்டம் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்றது. அப்போது குறித்த இராஜினாமாக்கள் தொடர்பாக  விரிவாக ஆராயப்பட்டது.  அதைத் தொடர்ந்து அந்த இராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதென தலைமைத்துவ சபை ஏகமனதாக முடிவு செய்தது.

இப்பதவிகளுக்கான புதிய நியமனங்கள் தொடர்பாகவும் தலைமைத்துவ சபை விரிவாக ஆராய்ந்தது. 

இதற்கான பரிந்துரைகள் ஏகமனதாக சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக கலந்துரையாடப்பட்டன. இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளப்பட்டு இப் பதவிகளுக்கான நியமனங்கள் பற்றி அறிவிக்கப்படவுள்ளது.

அத்தோடு கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் திடீர் இராஜினாமா நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் திடீர் இராஜினாமா Reviewed by Editor on December 27, 2021 Rating: 5