184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து,
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

255 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 24.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதனடிப்படையில் இலங்கை அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதோடு, 2-1 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.



184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இலங்கை   184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இலங்கை Reviewed by Editor on January 21, 2022 Rating: 5