ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

 அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (19) வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவிற்கு அமைய அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.











ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு Reviewed by Editor on January 20, 2022 Rating: 5