மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் முன்னேற்றம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

 (எம்.பஹ்த் ஜுனைட்)

மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் முன்னேற்றம் தொடர்பான பிரவேசம் எனும் தலைப்பில் மாவட்ட ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை பயிற்றுவிக்கும் திட்ட நிகழ்ச்சித் தொடரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலமர்வு புதன்கிழமை (19) மட்டக்களப்பு YMCA கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் வளவாளர்களாக கலந்துகொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான  சீ.தொடவத்த, மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் இணைப்பாளர் ஊடகவியலாளர் பிரதீபன், ஊடக ஆய்வாளர் லஹிரு கித்தரகம ஆகியோரால் மனித உரிமைகள் வளர்ச்சியும் தகவலுக்கான உரிமையும், மனித உரிமைகள் பற்றிய அறிக்கையிடலும் எதிர்நோக்கும் சவால்களும்,மனித உரிமை மீறல் கண்காணிப்பு நடவடிக்கைகள் போன்ற தலைப்புகளில் விரிவுரை நிகழ்த்தப்பட்டதுடன் மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் (CPA) இனால் வெளியிடப்பட்ட "தகவல் உரிமை பற்றிய தகவல்" கையேடும் வழங்கி வைக்கப்பட்டது.

பெறுமதி வாய்ந்த இச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு
பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.








மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் முன்னேற்றம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் முன்னேற்றம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு Reviewed by Editor on January 20, 2022 Rating: 5