அக்கரைப்பற்றில் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு இயந்திர சாதனம் வழங்கல்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச செயலக விதாதா வள நிலையத்தினால் ஒரு  கிராம சேவகர் பிரிவிற்கு ஒரு கைத்தொழில் முயற்சியாளரை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட இரண்டு பயனாளிகளுக்கான இயந்திர சாதனங்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.முஹம்மத் அன்ஷார் (நழிமி) அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர், மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் விதாதா வள இணைப்பாளர் ஆகியோரது பங்குபற்றலுடன் இந்நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.




அக்கரைப்பற்றில் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு இயந்திர சாதனம் வழங்கல் அக்கரைப்பற்றில் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு இயந்திர சாதனம் வழங்கல் Reviewed by Editor on January 05, 2022 Rating: 5