பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு வீதியில் இடைஞ்சல் கொடுக்கும் இளைஞர்கள் - அக்கரைப்பற்று பொலிசார் களத்தில் சிவில் உடையில்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு வீதிகளில்
தொந்தரவு செய்பவர்களுக்கு
எதிராக கடும் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படவுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பெரும் குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேச பாடசாலைகளில் குறிப்பாக பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் மாணவிகளுக்குப் பின்னால் கூட்டமாகச் சென்று இடைஞ்சல் செய்வதோடு, அலைபேசியில் புகைப்படம்
எடுப்பதாகவும் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு, சில மாணவிகள் இடைநடுவில் கல்வியை கைவிட்டுள்ளதாக
சுட்டிக்காட்டபட்டுள்ளது.

எனவே, பெண் பாடசாலைகள்
அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட
போக்குவரத்து பொலிஸாரை சிவில்
உடையில் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

கைதுசெய்யப் படுபவர்களுக்கு
எதிராக நீதிமன்றினுாடாக கடும்சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

(நன்றி - ஏசீசீ நியூஸ்)


பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு வீதியில் இடைஞ்சல் கொடுக்கும் இளைஞர்கள் - அக்கரைப்பற்று பொலிசார் களத்தில் சிவில் உடையில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு வீதியில் இடைஞ்சல் கொடுக்கும் இளைஞர்கள் - அக்கரைப்பற்று பொலிசார் களத்தில் சிவில் உடையில் Reviewed by Editor on January 18, 2022 Rating: 5