வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வழங்கல்

 அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்ததினால் கடுமையாக பாதிப்புக்குட்பட்ட மன்னார் மாவட்டத்தின் கோனார்பன்னை, புதுக்குடியிருப்பு, தோட்டவெளி, கரிசல், பேசாலை மற்றும் தாராபுரம் ஆகிய பிரதேச மக்களுக்கு தலா 11000/= ரூபாய் பெறுமதியான 200 அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ. காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் தனியார் சமூக தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் ஞாயிற்றுக்கிழமை (16) கரிசல் அலாவுந்தீன் பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக தொண்டு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனாப். மிஹ்லார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.




வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வழங்கல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வழங்கல் Reviewed by Editor on January 18, 2022 Rating: 5