அரசாங்க அதிபரினால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு

மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையில் மாவட்டச் செயலக வளாகத்தில்  நிறுவப்பட்ட  நீர் சுத்திகரிப்பு இயந்திரம்  மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான நந்தினி ஸ்ரான்லி டிமேல் அவர்களினால் இன்று (12) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கே.எஸ் வசந்தகுமார்(காணி), மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் எம். செல்வரத்தினம், மாவட்ட செயலக கணக்காளர் திரு. செல்வகுமார், உதவி மாவட்டச் செயலாளர் திரு. சிவராஜா, கிளை தலைவர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.




அரசாங்க அதிபரினால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு அரசாங்க அதிபரினால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு Reviewed by Editor on January 12, 2022 Rating: 5