நாட்டில் ஏற்பட்டுள்ள நெல் உற்பத்தி குறைவுக்கான பொறுப்பை என்னால் ஏற்க முடியாது - டட்லி

இரசாயன உரத் திட்டம் ஒரு நல்ல வேலைத்திட்டம் எனவும், ஆனால் அதன் முடிவுகளை தற்போது காணக் கூடியதாக அமைந்துள்ளதாக முன்னணி வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரிசியின் விலை மேலும் உயராது என்றும் இதுவே அதிகபட்ச விலையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த அதிகளவில் நெல் பயிரிட வேண்டும் என்றும், ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெல் உற்பத்தி குறைவுக்கான பொறுப்பைத் தான் ஏற்க முடியாது என்றும், அது தனது பிரச்சினையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(தினக்குரல்)


நாட்டில் ஏற்பட்டுள்ள நெல் உற்பத்தி குறைவுக்கான பொறுப்பை என்னால் ஏற்க முடியாது - டட்லி நாட்டில் ஏற்பட்டுள்ள நெல் உற்பத்தி குறைவுக்கான பொறுப்பை என்னால் ஏற்க முடியாது - டட்லி Reviewed by Editor on January 12, 2022 Rating: 5