காத்தான்குடி மாணவர்கள் கலைஞர்களுக்காக இடம்பெற்ற நாடகப் பயிற்சிப் பட்டறை

(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப் பிரிவு மற்றும் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையம் இணைந்து காத்தான்குடி பிரதேச மாணவர்கள், கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகப் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை (27) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி. ஜெயசங்கர் விரிவுரையாளராக கலந்துகொண்டு மாணவர்கள், கலைஞர்களுக்கான நாடகம்,இலக்கியம் தொடர்பிலான விரிவுரை மற்றும் பயிற்சிகளை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.ஜே.ஜவாஹிர், கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உதவியாளர் வீ.சிந்து உஷா ,உதவி கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.ஷர்மிளா, கலாசார மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.ஹில்மி ஆகியோரும் கலந்து கொண்டனர்.






காத்தான்குடி மாணவர்கள் கலைஞர்களுக்காக இடம்பெற்ற நாடகப் பயிற்சிப் பட்டறை காத்தான்குடி மாணவர்கள் கலைஞர்களுக்காக இடம்பெற்ற நாடகப் பயிற்சிப் பட்டறை Reviewed by Editor on January 28, 2022 Rating: 5