அக்கரைப்பற்று வரலாற்றில் பெருந்திரளானவர்களினால் வழங்கப்பட்ட இரத்ததானம் - ஏற்பாட்டுக் குழுவுக்கு கிடைத்த வெற்றி


(றிஸ்வான் சாலிஹு, சியாத் எம் இஸ்மாயில்)

அக்கரைப்பற்று தக்வா ஜும்ஆ பள்ளிவாசலின் பூரண எற்பாட்டில் பள்ளிவாசலின் தலைவரும் ஏற்பாட்டுக்குழுத்தலைவருமான எம்.எம்.றியாட் அவர்களின் தலைமையில் "மனிதம் காக்கும் மகத்தான பணி" அக்கரைப்பற்று வரலாற்றில் மிகவும் அதிகளவிலான இரத்த நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு உதிரம் வழங்கிய நிகழ்வு சனிக்கிழமை (08) காலை 8.00மணி முதல் மாலை 5.00 மணி வரை பள்ளிவாசல் வளாகத்தில் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் நடந்து முடிந்தது.







அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் அடிப்படையில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க, வைத்தியசாலை இரத்த வங்கியினரின் உதவியுடன், அக்கரைப்பற்று இளைஞர்கள் கழங்களின் சம்மேளனம், ஐகோனிக் யூத்ஸ் அமைப்பு, லீ ஸ்டார் கழகம், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி சாரணர் அணியினர், ஆர் கே எஸ் கழகம், இன்ஸ்பிரீங் யூத்ஸ், சிலோன் ஈஸ்ட் மீடியா வலையமைப்பு, ஏ கே பி நியூஸ், ரிதம் ரீவி, ஆர்.கே.எஸ் மீடியா நெட்வொர்க் ஆகியவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில் ஆண் மற்றும் பெண் 231 இரத்த கொடையாளிகள் கலந்து கொண்டதில் சுமார் 202 நபர்களின் இரத்தம் சேகரிக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைன் இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டமை அக்கரைப்பற்றின் வரலாற்றில் மிக அதிகமானவர்கள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியமை இந்நிகழ்வு என்றால் அது மிகையாகாது.













இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்..அன்சார், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர். ஏ.ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக், அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ், அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர் மஃரூப், அக்கரைப்பற்று ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் அஷ்ஷேக் ஹபீப் இஸ்மாயில், அந்நூர் அமைப்பின் செயலாளர் ஜனாப்.முஸாதீக், ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் ஜனாப்.உமர் லெப்பை, அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் வேலுப்பிள்ளை சந்திரசேகம், அலிக்கம்மை புனித சேவியர் வித்தியாலய அதிபர், அக்கரைப்பற்று இளைஞர் சேவை அதிகாரி சமீலுல் இலாஹி, அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சம்மேளன பிரதித்தலைவர் எம்.எம்.ருக்ஸான், தக்வா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

பிரதேச செயலாளர் தனதுரையில்,


அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தனதுரையில்,


அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் தனதுரையில்,


நிகழ்வில் கலந்து கொண்ட கெளரவ மற்றும் விசேட அதிதிகளும் இரத்ததானங்களை செய்ததுடன், வைத்தியர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், மார்க்க அறிஞர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் ஆகியோரும் இரத்ததானம் வழங்கினார்கள்.

இரத்ததானம் வழங்க வந்தவர்கள் இங்கு கருத்து தெரிவிக்கையில்,






அக்கரைப்பற்று வரலாற்றில் பெருந்திரளானவர்களினால் வழங்கப்பட்ட இரத்ததானம் - ஏற்பாட்டுக் குழுவுக்கு கிடைத்த வெற்றி அக்கரைப்பற்று வரலாற்றில் பெருந்திரளானவர்களினால் வழங்கப்பட்ட இரத்ததானம் - ஏற்பாட்டுக் குழுவுக்கு கிடைத்த வெற்றி Reviewed by Editor on January 09, 2022 Rating: 5