இடமாற்றலாகி செல்லும் வைத்தியர் எம்.ஐ.ஏ. நஸீருக்கு கெளரவம்

(சியாத் எம். இஸ்மாயில்
பட உதவி.கே.மாதவன்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஆரம்ப மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (PCU) பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடந்த 07 வருடங்களாக பணியாற்றி,  அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை அதிகாரியாக (DMO) இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர் எம்.ஐ.ஏ. நஸீர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் டாக்டர் ஏ.சீ.அப்துல் றசாக் தலைமையில் அண்மையில் கிளினிக் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத். எம். ஹனிபா கலந்து கொண்டு ஞாபகச்  சின்னமொன்றை வழங்கிவைத்ததுடன், நலன்புரிச்சங்கத்தின் உப தலைவர் டாக்டர்.எம்.எச்.எம்.சனூபர் மற்றும்  நலன்புரிசங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
                


               
   

இடமாற்றலாகி செல்லும் வைத்தியர் எம்.ஐ.ஏ. நஸீருக்கு கெளரவம் இடமாற்றலாகி செல்லும் வைத்தியர் எம்.ஐ.ஏ. நஸீருக்கு கெளரவம் Reviewed by Editor on January 16, 2022 Rating: 5