கட்டாருக்கு பயணிப்போருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவித்தல்

இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு பயணிப்போருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், இலங்கையிலிருந்து கட்டாருக்கு பயணிப்பவர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கட்டார் பயணிக்கும் பிரஜைகளுக்கும், (Qatar Citizens) மற்றும் கட்டார் குடிமக்கள் (Qatar ID Holders) ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேற்படி நபர்கள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்திருத்தல் கட்டாயமாகும்.

பொதுவான நிபந்தனைகள்

கட்டார் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தியிருத்தல் (இரண்டு டோஸ்கள்)

கோவிட்-19 இலிருந்து (கத்தாருக்குள்) குணமடைந்தவர்கள், குணமடைந்த நாளிலிருந்து 14 நாட்கள் கடந்திருத்தல்.

கத்தாருக்கு பயணிக்க முன்னர்

72 மணித்தியாலங்களுக்குள் PCR பரிசோதனை செய்து எதிர்மறை (PCR Negative) பெறுபேற்றைக் கொண்டிருத்தல்

கத்தார் வந்தடைந்த பின்னர்

கத்தாருக்கு வந்த 36 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனையை மேற்கொள்ளல் வேண்டும்.

முக்கிய குறிப்பு 

மேற்படி நிபந்தனைகள் புதிதாக கத்தாருக்கு பயணிப்பவர்கள் மற்றும் விசிட் வீசாவில் பயணிப்பவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் கட்டாயம் இரண்டு நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் நிறைவு செய்தல் வேண்டும்.

முழுமையான தகவல்களுக்கு சுகாதார அமைச்சின் இணையத்திற்கு பிரவேசிக்கும் படி பயணிகளை  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




கட்டாருக்கு பயணிப்போருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவித்தல் கட்டாருக்கு பயணிப்போருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவித்தல் Reviewed by Editor on January 04, 2022 Rating: 5