அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நலன்புரிச்சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு கௌரவிப்பு

(சியாத் எம். இஸ்மாயில், பட உதவி கே.மாதவன்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நலன்புரிச்சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு அக்கரைப்பற்று ஒலிவியா (OLIVIA) வைத்தியசாலையினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ரீ - சேட் வழங்கி கெளரவிக்கும்  நிகழ்வு நலன்புரி சங்க தலைவர் டாக்டர் ஏ.சி. அப்துல் ரஷாக் தலைமையில் கிளினிக் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத். எம். ஹனிபா கலந்து கொண்டு நலன்புரிச்சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் அர்ப்பணிப்பான சேவையினை பாராட்டி  ரீ -சேட் மற்றும் ஞாபகச்சின்னம், சான்றிதழ் ஆகியவற்றினை வழங்கி வைத்து கௌரவமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பொது வைத்திய நிபுணர் டாக்டர்.எம்.டி.சமரநாயக்க, வாய் முகத் தாடை சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் விராஜ் ஐயசிங்க, திட்டமிடல் பொறுப்பு வைத்தியர் டாக்டர் ஆகில் ஷரீப்தீன், தரமுகாமைத்துவப் பிரிவின் பொறுப்பு டாக்டர் வைத்தியர் எம்.எம்.தாஸிம், அரச மருத்துவ அதிகாரி சங்க தலைவர் டாக்டர். ஸியாத்.எம்.இஸ்மாயில், நலன்புரிச்சங்கத்தின் உப தலைவர் டாக்டர்.எம்.எச்.எம். சனூபர், செயலாளர் ஏ.பி. நூறுல்லாஹ் மற்றும்  நலன்புரிசங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட  பலர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நலன்புரிச்சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு கௌரவிப்பு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நலன்புரிச்சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு கௌரவிப்பு Reviewed by Editor on January 21, 2022 Rating: 5