சம்மாந்துறை பிரதேச செயலாளரை பாராட்டி சான்றிதழ் வழங்கி வைப்பு

(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்)

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் அதனூடாக வழங்கப்பட்டும் கல்வியில் திறமை காட்டுகின்ற மாணவர்களுக்கான நலவுரித்துக்களை பெற்றுக் கொடுக்கும் செயற் திட்டத்துக்காக அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் 2021ஆம் ஆண்டு திறமையாகச் செயற்பட்டு தேசிய மட்ட அடைவை பெற்றுக் கொண்ட சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சார்பில் பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மத் ஹனிபாவை பாராட்டி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எம். ஏ.  டக்லஸ்  சான்றிதழ் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதன்போது இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தவிசாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சமன் ஹண்டாரகம, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பணிப்பாளர் பி.பிரதீபன், அம்பாரை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரீ.சுதாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த சாதனைக்காக பாராட்டுகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.







சம்மாந்துறை பிரதேச செயலாளரை பாராட்டி சான்றிதழ் வழங்கி வைப்பு சம்மாந்துறை பிரதேச செயலாளரை பாராட்டி சான்றிதழ் வழங்கி வைப்பு Reviewed by Editor on January 27, 2022 Rating: 5