அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான புதிய சட்டம்

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானால், அதனை சுயமாக சரி செய்யக் கூடாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித் துள்ளார்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில், அவர்கள் முதலில் செய்ய வேண்டியது, வாகனத்தை வீதியின் பாதுகாப்பு வலயத்துக்கு அகற்றி, உடனடியாக 1969 அதிவேக நெடுஞ்சாலை சேவை இலக்கத்துக்கு அழைத்து அவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கூறினார்.

மாறாக, விபத்துகளை தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்கும் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (29) காலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(தினக்குரல்)



அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான புதிய சட்டம் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான புதிய சட்டம் Reviewed by Editor on January 29, 2022 Rating: 5