இலங்கையின் கிராமப் புரங்களில் ஆறு, குளம், வாய்க்கால் போன்றவற்றில் முட்டை இட்டு பெருகிய கிராமிய மலேரியா நோய் காவியான அனோபிலிஸ் கியுலிசிபேசிஸ் இன நுளம்புகள் அண்மைய சில வருடங்களாக கல்முனை பிராந்தியத்தின் பிரதான நகரங்களில் கிணறுகளிலும், சிறு கொள்கலன்களிலும் முட்டை இட்டு பெருக ஆரம்பித்துள்ளது.
அதே போல், தமிழ் நாட்டில் மலேரியா நோயைப் பரப்பும் நகர்புர மலேரியா நோய் காவியான அனோபிலிஸ் ஸடெபன்ஷி இன நுளம்புகள் கல்முனை பிராந்தியத்தின் பல பிரதான நகரங்களுக்கும் பரவி விரிந்துவிட்டது. இவ்இன நுளம்புகள் டெங்கு நுளம்புகளைப் போல் நகர்ப் பகுதிகளில் கிணறுகளிலும் சிறு கொள்கலன்களிலும் முட்டை இட்டு பெருகும் ஒரு நுளம்பினமாகும்.
மன்னார், யாழ்ப்பானம், கல்முனை பிராந்தியங்களில் மட்டும் பரவிக் காணப்படும் அனோபிலிஸ் ஸ்டெபன்ஷி நுளம்பினம் ஒலுவில் துறைமுகத்தை சூழவுள்ள பகுதியிலும் அதிகளவில் பெருகிக் காணப்படுகின்றது.
ஒலுவில் துறைமுகம் மீளவும் இயங்க ஆரம்பிக்குமாயின் இந்நுளம்பினம் இலங்கையின் பிரதான பல நகரங்களுக்கும் ஒலுவில் துறைமுகத்தினூடாக பரவும் ஆபத்தான வாய்ப்புக்கள் அதிகம் கானப்படுகின்றது.
மலேரியா நோயைப் பரப்பும் இவ்விரு இன நுளம்புகளும் கல்முனை பிராந்தியத்தின் பிரதான நகரங்களில் பரவியுள்ளமையினால் மலேரியா நோய் ஆபத்துள்ள நாடுகளில் இருந்து மலேரியா தொற்றாளர்கள் வரும்பட்சத்தில் மலேரியா நோய் வேகமாக பரவும் ஆபத்தான நிலையை கல்முனை பிராந்தியம் எதிர் கொண்டிருக்கின்து.
மலேரியா தொற்று ஆபத்துள்ள நாடுகளிலிருந்து இருந்து வருபவர்கள் அண்மையிலுள்ள அரச ஆஸ்பத்திரிகளுக்கு சென்று மலேரியா இரத்த பரிசோதனை செய்து தமக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் கல்முனை பிராந்தியத்தை மலேரியா ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
சுகாதார பூச்சியல் உத்தியோகத்தர்