தேவாலய கைக்குண்டு விவகாரம் தொடர்பில் சிறுவனிடம் வாக்குமூலம்

பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள தேவாலயத்தில் நேற்று முன்தினம் (11) மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பான விபரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வெளியிட்டார்.

வெப்பத்தினால் வெடிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கைக்குண்டு, தேவாலயத்துக்கு அருகில் வசிக்கும் 13 வயதான சிறுவனின் மூலம் தேவாலயத்துக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை 4 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அதில் மருதானையைச் சேர்ந்த 56 வயதான பிரதான சந்தேக நபர் கடந்த 16 வருடங்களாக குறித்த தேவாலயத்தில் சேவையாற்றி வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குண்டைத் தயாரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களின் பாகங்கள் அவர் தங்கியிருந்த அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறி னார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும் பொரளைப் பொலிஸாரும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

(தினக்குரல்)


 

தேவாலய கைக்குண்டு விவகாரம் தொடர்பில் சிறுவனிடம் வாக்குமூலம் தேவாலய கைக்குண்டு விவகாரம் தொடர்பில் சிறுவனிடம் வாக்குமூலம் Reviewed by Editor on January 13, 2022 Rating: 5