புகைப்படம் எடுத்தல் மற்றும் மனநிறைவு பற்றிய செயலமர்வு

 (றிஸ்வான் சாலிஹூ)

அம்பாறை மாவட்ட உளவளத்துணைப் பிரிவின் ஏற்பாட்டில், Club Photo Ceylonica அமைப்பின் ஆதரவில் இன்று (12) புதன்கிழமை புகைப்படம் எடுத்தல் மற்றும் மனநிறைவு பற்றிய செயலமர்வு நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்த செயலமர்வானது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் அவர்களின் நெறிப்படுத்தலில், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதான வளவாளராக சர்வதேச ரீதியில் புகைப்படத்துறையில் சாதனை படைத்து  பல்வேறு விருதுகளைப் பெற்றவர்களான டாக்டர் ஆகில் அஹ்மத் சரிபுத்தீன், ஜனாப். ஹமீட் மற்றும் ஜனாப். மஜீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உளவளத்துணை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்ற இந்நிகழ்வில்  டாக்டர் ஆகில் அஹமட் அவர்கள், உளவளத்துணை நடவடிக்கையில் சேவை நாடிகளின் பிரச்சினைகளைக் கையாளும் போது போட்டோ கிராபியை சிகிச்சைத் தலையீட்டு நுட்பமாக பயன்படுத்தும் விதம் பற்றியும், உளவளத்துணையாளர்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட உளநெருக்கீட்டினை முகாமை செய்வதற்கு இந்த போட்டோ கிரபியை பயன்படுத்தும் விதம் பற்றியும் போன்ற பல முக்கிய விளக்கங்களை இந்த செயலமர்வில் முன்வைத்தார்.

மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் ஏ.ஏ.தீன்முகம்மத் இந்நிகழ்வை இணைப்பாக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



புகைப்படம் எடுத்தல் மற்றும் மனநிறைவு பற்றிய செயலமர்வு புகைப்படம் எடுத்தல் மற்றும் மனநிறைவு பற்றிய செயலமர்வு Reviewed by Editor on January 12, 2022 Rating: 5