வியாழக்கிழமைக்கு பின்னர் மின் விநியோகத்தின் நிலை என்னவென்பது உரிய அமைச்சர்களிற்கு கூட தெரியாது - ஜேவிபி

நாட்டின் மின்விநியோகத்தின்  நிலை குறித்து என்னவென்பது  பொறுப்பான அமைச்சர்களிற்கு கூட தெரியாத நிலை காணப்படுகின்றது என ஜேவிபி விமர்சித்துள்ளது.

வியாழக்கிழமை பின்னர் மக்களிற்கு மின்சாரம் கிடைக்குமா என்பது அமைச்சர்களிற்கு கூட தெரியாத நிலை நிலவுகின்றது என ஜேவிபியின் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

போதிய அளவு உலை எண்ணெய் சேமிப்பில் இல்லாததால் சப்புகஸ்கந்த மின்நிலையம் இயங்க முடியாத நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள அவர் கொழும்பு துறைமுக மின்நிலையமும் எரிபொருள்இல்லாத நிலையை எதிர்கொள்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

களனிதிச மின்நிலையத்தை மூன்றுநாட்கள் இயக்குவதற்கு போதுமான எரிபொருளே உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என தெரிவித்துள்ள விஜித ஹேரத் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்காததால் உலை எண்ணெயை அரசாங்கத்தினால் உற்பத்தி செய்ய முடியவில்லை இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளிற்கான டொலரை செலுத்த முடியாத நிலையில் அரசாங்கம் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் முடிவுகளின் அடிப்படையில் துறைமுகத்தில் டீசல் இறக்கப்படுகின்றது எனினும் மின்நிலையங்களிற்கு டீசலை வழங்கினால் போக்குவரத்து துறையும்  ஏனைய துறைகளும் பாதிக்கப்படலாம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

(தினக்குரல்)



வியாழக்கிழமைக்கு பின்னர் மின் விநியோகத்தின் நிலை என்னவென்பது உரிய அமைச்சர்களிற்கு கூட தெரியாது - ஜேவிபி வியாழக்கிழமைக்கு பின்னர் மின் விநியோகத்தின் நிலை என்னவென்பது உரிய அமைச்சர்களிற்கு கூட தெரியாது - ஜேவிபி Reviewed by Editor on January 26, 2022 Rating: 5