ரஹ்மத் பவுண்டேசன் ஒருங்கிணைப்பில் கல்முனையில் வாழ்வாதார உதவிகள் வைப்பு

(எம். என். எம். அப்ராஸ் )

ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில்  வை.டப்ளியு.எம். ஏ. (YWMA ) அமைப்பின் பூரண அணுசரணையுடன், வாழ்வாதார உதவிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகரசபை பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் கல்முனை அல் - மிஸ்பாஹ்  மகா வித்தியாலய மண்டபத்தில் வியாழன்(06) இடம்பெற்றது.

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்கு  உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன  இதன் போது வழங்கி வைக்கப்பட்டது மேலும் பல்கலைகழகத்தில் கல்வியை தொடரும் மாணவி  ஒருவருக்கு  புலமை பரிசில் ,  கல்முனை அல் மிஸ்பாஹ்  மகா வித்தியாலய விஷேட கல்வி பிரிவுக்கு உதவி தொகை வழங்கி என்பன பாடசாலை அதிபரிடம் குறித்த YWMA அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது .

மேலும் இதன் போது ரஹ்மத் பவுண்டேசனின் அமைப்பினால் YWMA அமைப்பின் தலைவி தேசமான்ய பவாசா தாஹா மற்றும் கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவி பைரூசா காசிம் ஆகியோர் ரஹ்மத் பவுண்டேசனினால்  பொன்னாடை போர்த்தி  நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன் போது YWMA அமைப்பின் தலைவி தேசமான்ய பவாசா தாஹா , உட்பட அமைப்பின் அங்கத்தவர்கள் , கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவி பைரூசா காசிம் , கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர்  எம் . ஐ. அப்துல் ரஸாக், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ. ஆர்.செலஸ்தினா , விமாலாதித்தன் நந்தினி , விநாகமூர்த்தி புவேனேஸ்வரி ,சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். எம். நிலுபா , ரஹ்மத் பவுண்டேசன்  அமைப்பின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .






ரஹ்மத் பவுண்டேசன் ஒருங்கிணைப்பில் கல்முனையில் வாழ்வாதார உதவிகள் வைப்பு ரஹ்மத் பவுண்டேசன் ஒருங்கிணைப்பில் கல்முனையில் வாழ்வாதார உதவிகள் வைப்பு Reviewed by Editor on January 07, 2022 Rating: 5