முன்னாள் ஜனாதிபதியை விட தற்போதைய ஜனாதிபதி சிறந்த ஒரு ஆளுமையுள்ள தலைவர் - கேட்டக்கல்விப்பணிப்பாளர் தெரிவிப்பு

 (எம்.எஸ்.எம்.நூர்தீன்)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை விட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறந்த ஒரு ஆளுமையுள்ள தலைவர் என காத்தான்குடி கேட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் மாணவ தலைவிகளுக்கு சின்னம் சூட்டி கௌரவிக்கும் வைபவம் (24) திங்கட்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலையின் அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில்  தொடர்ந்துரையாற்றிய அவர்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை விட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறந்த ஒரு ஆளுமையுள்ள தலைவராகும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் சில தலைமைத்துவ பண்புகள் இருக்க வில்லை. ஆனால் தற்போதைய கோட்டாபய ராஜபக்சவிடம் தலைமைத்துவ பண்புகளும் சிறந்த ஆளுமையும் இருக்கின்றது.

ஒரு குடும்பத்தின் தலைவன் அந்தக் குடும்பத்தின் ரகசியங்களையும் பலவீனங்களையும் வெளியிடாமல் சவால்களை எதிர்கொண்டு தனது குடும்பத்தை முன்னோக்கிச் கொண்டு செல்வதே ஒரு குடும்ப தலைவனுக்கு இருக்க தலைமைத்துவ பண்புகளில் ஒன்றாகும்.

அதே போன்றுதான் பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு ஒழுக்கமும் சிறந்த ஆற்றலும் இருக்க வேண்டும். அதிபர்களுக்கும் இருக்க வேண்டும்.
அப்போதுதான் பாடசாலையை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என மேலும் தெரிவித்தார்.





முன்னாள் ஜனாதிபதியை விட தற்போதைய ஜனாதிபதி சிறந்த ஒரு ஆளுமையுள்ள தலைவர் - கேட்டக்கல்விப்பணிப்பாளர் தெரிவிப்பு முன்னாள் ஜனாதிபதியை விட தற்போதைய ஜனாதிபதி சிறந்த ஒரு ஆளுமையுள்ள தலைவர் - கேட்டக்கல்விப்பணிப்பாளர் தெரிவிப்பு Reviewed by Editor on January 24, 2022 Rating: 5