அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சை நிலையம் திறப்பு

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உள்ள சத்திரசிகிச்சைக்கூட தொகுதியில் இன்று (01) சனிக்கிழமை நான்காவது சத்திரசிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

புதிதாக திறந்து வைக்கப்பட்ட சத்திர சிகிச்சை கூடத்தினூடாக, இப்பிராந்திய பொது மக்களின் அதிகரித்து வரும் சத்திர சிகிச்சை தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியும் என நம்புவதாக வைத்தியசாலையின் திட்டமிடல் அபிவிருத்தி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஆகில் அஹமட் ஷரீபுதீன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம் ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய சத்திர சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த இந்நிகழ்வில், விசேட வைத்திய நிபுணர்கள், சிரேஷ்ட வைத்தியர்கள், தாதிய பரிபாலகர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.






அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சை நிலையம் திறப்பு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சை நிலையம் திறப்பு Reviewed by Editor on January 01, 2022 Rating: 5