சம்மாந்துறையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், சம்மாந்துறை பிரதேச சபையும்,  இணைந்து கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு தினங்கள் முன்னெடுத்தன.

மழையுடன் கூடிய கால நிலை காணப்படுவதினால் பிரதேசத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய கொள்கலங்களான , டயர்கள், யோக்கட் கப், சுரட்டைகள், மட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலங்கள் சேகரிக்கப்பட்டதுடன் நீர்தேங்கியுள்ள இடங்கள் துப்புரவு செய்யப்பட்டது.

சம்மாந்துறை பொதுச் சுகாதார பிரிவுகளான சம்மாந்துறை 01, 02, கருவாட்டுக்கல் - 03,  உடங்கா, வீரமுனை  ஆகிய பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை (21) வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை பொதுச் சுகாதார பிரிவுகளான  மலையடிக்கிராமம், விளினியடி, கல்லரிச்சல் ஆகிய பிரதேசங்களில் சனிக்கிழமை (22) வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா, பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,  பிரதேச, சபையின் மேற்பார்வை உத்தியோகத்தர்கள், டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







சம்மாந்துறையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சம்மாந்துறையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை Reviewed by Editor on January 24, 2022 Rating: 5