உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி நீடிப்பு

இலங்கை உயர்தொழிநுட்ப கல்வி நிறுவகங்களில்(SLIATE-ATI) உயர்தேசிய டிப்ளோமா கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இக்கற்கைநெறிகள் தொடர்பான விபரங்கள் ஏற்கனவே இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டது.

விண்ணப்ப முடிவுத்திகதி - 2022.02.14

விண்ணப்பங்கள் apply.sliate.ac.lk இணையத்தளம் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.

உயர்தரப்பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியுடைய மாணவர்கள் இங்கு உயர் தேசிய டிப்ளோமாக்களை பெற்றுகொள்வதற்கான மாணவர்களாக அனுமதிக்கப்படுகின்றனர். சில பாட நெறிகளுக்காக செட் புள்ளி(Z.Score) அடிப்படையில் நேர்முகத்தேர்வு ஊடக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதுடன் சில பாடநெறிகளுக்கு விசேடமாக அனுமதிப்பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

இங்கு வழங்கப்படும் பாடநெறிகள்:

1.உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா(HNDA) – இக்கற்கையானது வணிகத்துறை படத்துக்கு(B.Com) சமனானதாக அரசாங்க சுற்றுநிருபங்களால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

2.உயர் தேசிய வியாபார நிருவாக டிப்ளோமா(HNDBA)

3. உயர் தேசிய வியாபார நிதியியல் டிப்ளோமா(HNDBF)

4.நுகர்வோர் விஞ்ஞானங்கள் மற்றும் உற்பத்தி தொழிநுட்பவியல் உயர் தேசிய டிப்ளோமா(HNDCSPT)

5.பொறியியல் உயர் தேசிய டிப்ளோமா(HNDE - சிவில்)

6.பொறியியல் உயர் தேசிய டிப்ளோமா(HNDE -மின்னியல் மற்றும் இலத்திரனியல்)

7. பொறியியல் உயர் தேசிய டிப்ளோமா(HNDE - பொறிமுறை)

8.அளவை,அளவையியல் உயர் தேசிய டிப்ளோமா(HNDQS)

9.கட்டட சேவைகள் பொறியியல் உயர் தேசிய டிப்ளோமா(HNDBSE)

10.ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா(HND in English)

11.உணவு தொழிநுட்பவியல் உயர் தேசிய டிப்ளோமா(HNDFT)

12.தகவல் தொழிநுட்பவியல் உயர் தேசிய டிப்ளோமா(HNDIT)

13.முகாமைத்துவ உயர் தேசிய டிப்ளோமா(HNDM)

14.செயற்றிட்ட முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா(HNDPM)

15.தொழிநுட்பவியல் கமத்தொழில் உயர் தேசிய டிப்ளோமா(HNDT-Agriculture)

16.சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ உயர் தேசிய டிப்ளோமா(HNDTHM)


இப்பாடநெறிகளானது எவ்வித கட்டணங்களும் இன்றி இலவசமாகவே முழு நேர அடிப்படையில் வழங்கப்படுகின்றன. உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா, ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா மற்றும் தகவல் தொழிநுட்பவியல் உயர் தேசிய டிப்ளோமா ஆகிய மூன்று பாடநெறிகள் மாத்திரம் வாரநாட்களில் தொழில் புரிபவர்களும் கற்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டிய அடிப்படையில் மிகச்சிறிய கட்டணங்களுடன் பகுதி நேர அடிப்படையிலும் கற்பிக்கப்படுகின்றன.

இங்கு உயர் தேசிய டிப்ளோமாக்களை பூர்த்தி செய்கின்ற மாணவர்கள் இலகுவாக தொழிற்சந்தைக்கு முகங்கொடுத்து தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களை பெறுவதோடு உயர் தேசிய டிப்ளோமாக்களில் இருந்து இலகுவாக பட்டப்படிப்புக்களை பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புக்களை பெறுகின்றனர்.

அம்பாறை ஹாடி, அனுராதபுரம், பதுளை,மட்டக்களப்பு, கொழும்பு, தெஹிவளை,காலி,கம்பஹா,யாழ்ப்பாணம், கண்டி,கேகாலை,குருநாகல், மன்னார்,நாவலப்பிட்டி, இரத்தினபுரி, சம்மாந்துறை,தங்காலை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் இந்த  உயர் தொழிநுட்ப கல்வி நிறுவகங்கள் அமையப்பெற்றுள்ளன.ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு கற்கை நெறிகள் காணப்படுகின்றன.

இங்கு கல்வி கற்கும் மானவர்களுக்கு அரசினால் மஹாபொல உதவித்தொகை வழங்கப்படுதல்,தங்குமிட வசதிகள்(சில உயர் தொழிநுட்ப கல்வி நிறுவகங்களில் மாத்திரம்),நூலாக வசதி, இலவச இணைய வசதி உற்பட இன்னும் சில இதர வசதிகளும் வழங்கப்படுகின்றமை சிறப்பு அம்சமாகும்.


ஆதம்லெப்பை ஆதிப் அஹமட்(AAT Passed Finalist)
Final year student,
Department of Accountancy,
Advanced Technological Institute,
Batticaloa

உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி நீடிப்பு உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி நீடிப்பு Reviewed by Editor on February 01, 2022 Rating: 5