கவிதாயினிகளுக்கான ஓர் வரப்பிரசாதம், நீங்களும் ஓர் வெற்றியாளராகலாம்!!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர் அமைப்பு நடாத்தும் மாபெரும் கவிதைப்போட்டி-2022

நீங்களும் ஓர் வெற்றியாளராக வர வேண்டுமா? கீழேயுள்ள விடயங்களை நன்கு கவனியுங்கள்.

கவிதைப்போட்டியின் தலைப்பாக, 

பெண்மை இனிதடா, 

பல தடவைகள் தாண்டியே இவள் சாதனைகள் 

பெண்கள் அதோ பார் தோ "ரணங்கள்" போன்ற கவிதை தலைப்புகள் அமையப் பெற்றுள்ளது.


போட்டி நிபந்தனை

01.20-30 வரிகளுக்குள் கவிதை அமைதல் வேண்டும்.

02.எழுதப்படும் கவிதை 60- 80 சொற்களுக்குள்  மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

03.கவிதைக்கான தலைப்பின் (கருவின்) கீழ் ஆழமான கருத்துப் பொதிவுகளுடன் கவிதை எழுதப்பட வேண்டும்.

04.எழுதப்படும் கவிதை எந்த வலையத்தளத்திலும் , பாத்திரிகைகளிலும்  இதற்கு முன்னர் பிரசுரிக்கப்படாததாக இருக்க வேண்டும்.

05. கவிதை எழுதுபவரின் சுய ஆக்கமாக/ படைப்பாகவே போட்டிக்கு அனுப்படும்  கவிதை அமைய வேண்டும்.

06.எழுத்துப்பிழை ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதப்படவேண்டும்.

07.கவிதை எழுதுபவர் தனது கவிதையின் கீழ்  தமிழில்  தனது பெயர் , முகவரியை கண்டிப்பாக கூறிப்பிட வேண்டும்.

08.போட்டி விதிமுறைகளை மீறும் கவிதைகள் நன்றாக அமைந்தாலும் போட்டிக்கு உட்பட மாட்டாது .

கவிதைகள் அனுப்ப வேண்டிய இறுதித்திகதி 2022.02.13 என்பதோடு, 0772493508 என்ற வட்சப் இலக்கத்திற்கு கவிதைகளை அனுப்பும்படி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

(தகவல் - அறிவிப்பாளர் றம்ஸானா சமீல்)


கவிதாயினிகளுக்கான ஓர் வரப்பிரசாதம், நீங்களும் ஓர் வெற்றியாளராகலாம்!!! கவிதாயினிகளுக்கான ஓர் வரப்பிரசாதம், நீங்களும் ஓர் வெற்றியாளராகலாம்!!! Reviewed by Editor on February 01, 2022 Rating: 5