பாராளுமன்ற அமர்வு இன்று (09) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு. ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை,
(i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(v) மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(vi) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனை அடுத்து, பி.ப. 4.30 மணி முதல் பி.ப. 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும் என்று நாடாளுமன்ற ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.