அதிபர் நியமனங்களுக்காக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் எனக்கு அறிவியுங்கள் - ஜனாதிபதி

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில் விண்ணப்பதாரியிடமிருந்து அழுத்தம் ஏற்பட்டுள்ளதா என கண்டறியுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின் போது, விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் அதன் பின்னரான தேர்வுகளின் போது, அரச சேவை ஆணைக்குழுவுக்கோ அல்லது கல்விச் சேவை ஆணைக்குழுவுக்கோ, விண்ணப்பதாரிகளினால் ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு உள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அதிபர் நியமனங்களுக்காக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் எனக்கு அறிவியுங்கள் - ஜனாதிபதி அதிபர் நியமனங்களுக்காக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் எனக்கு அறிவியுங்கள் - ஜனாதிபதி Reviewed by Editor on February 09, 2022 Rating: 5