பிணையில் விடுவிக்கப்பட்ட சட்டத்தரணி ஹிஸ்புல்லா

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவிற்கமைய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்று (09) புதன்கிழமை புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதி வழங்கியுள்ளதோடு, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டுமென மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




 

பிணையில் விடுவிக்கப்பட்ட சட்டத்தரணி ஹிஸ்புல்லா பிணையில் விடுவிக்கப்பட்ட சட்டத்தரணி ஹிஸ்புல்லா Reviewed by Editor on February 09, 2022 Rating: 5