நோர்வே நாட்டின் தூதுவர் மற்றும் அரச அதிபருக்கிடையிலான சந்திப்பு

(மன்னார் செய்தியாளர் - சமுர்தீன் நௌபர்)

நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் மன்னாருக்கு விஐயத்தை மேற்கொண்டதுடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல்லை மரியாதையின் நிமித்தம் சந்தித்து இருவருக்குமிடையே மன்னார் மாவட்ட மக்களின் நிலைபாடுகள் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக உரையாடப்பட்டது.

நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் வியாழக்கிழமை (17) மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டதுடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை அன்றைய காலை மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் பணிமணையில் சந்திப்பும் இடம்பெற்றது.

இவர்கள் இருவருக்குமிடையே இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின்போது, மன்னார் மாவட்டம் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மாவட்ட மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்தோடு மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராமிய மட்ட உட்கட்டமைப்பு விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியுள்ளதுடன் தூதுவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இச்சந்திப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் க.மகேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.










நோர்வே நாட்டின் தூதுவர் மற்றும் அரச அதிபருக்கிடையிலான சந்திப்பு நோர்வே நாட்டின் தூதுவர் மற்றும் அரச அதிபருக்கிடையிலான சந்திப்பு Reviewed by Editor on February 19, 2022 Rating: 5